Home இலங்கைதலைமன்னாரில் மரம் சரிந்து விழுந்ததில் மின் தடை.

தலைமன்னாரில் மரம் சரிந்து விழுந்ததில் மின் தடை.

by admin

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தலைமன்னார்   கிராமத்தின் வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் உள்ள மரியாள் வீதியில் அமைந்துள்ள கன்னியர் மடத்தின் வளாகத்திலுள்ள பாரிய புளிய மரம் ஒன்று இன்று திங்கட்கிழமை(21) காலை வீசிய  பலத்த காற்று காரணமாக தூரோடு சரிந்து வீழ்ந்துள்ளது.


குறித்த மரம் அருகில் நின்ற தென்னை மரத்தையும் முறித்து வீதியின் எதிர் பக்கமுள்ள வீட்டின் கூரை மீது விழுந்துள்ளது.
இதன் காரணமாக   வீட்டிற்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிக்கான மின்சாரம், தொலைத் தொடர்பு இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கிராம அலுவலகர்  மற்றும் மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
-மேலும் குறித்த பகுதிக்கு வந்த மின்சார சபை அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர். #தலைமன்னார் #மின்தடை

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More