ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் ஷைபி, அதன் அரசியல் மற்றும் வரத்தகப் பிரிவின் தலைவர் தோஸ்டன் பேக்பிரீட் ஆகியோர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (23) கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அதன்போது, கல்முனை மாநகர சபையின் பிரதி மேயரும், தலைவரின் இணைப்பாளருமான ரஹ்மத் மன்சூரும் உடனிருந்தார். #ஐரோப்பியஒன்றியம் #ஹக்கீம் #சந்திப்பு