Home இலங்கைதெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்!

தெஹிவளை தாக்குதலுக்கு முன், தற்கொலைதாரி, புலனாய்வுப்பிரிவு அதிகாரியைச் சந்தித்தார்!

by admin

உயிா்த்த ஞாயிறுத் தாக்குல் அன்று தெஹிவளையில் குண்டை வெடிக்கச் செய்த தற்கொலைதாரி அப்துல் லத்தீஃப் ஜமீல் மொஹமட் குண்டு வெடிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரை சந்தித்துள்ளதாக முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயிா்த்த ஞாயிறுத் தாக்குல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்றையதினம் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு தொிவித்துள்ளாா்.

தற்கொலைதாரியை சந்தித்தது யார் என்பதைக் கண்டறிந்து குறித்த சந்திப்பு உத்தியோகபூர்வ மட்டத்தில் இடம்பெற்றதா என ஆராயுமாறு முன்னாள் காவல்துறைமா அதிபர் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தாஜ் சமுத்ரா ஹோட்டலிலிருந்து வௌியேறிய குறித்த தற்கொலைதாரி தெஹிவளைக்கு செல்வதற்காக இரண்டு முச்சக்கரவண்டிகளை பயன்படுத்தியுள்ளதாகவும் பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளாா். #தற்கொலைதாரி #தெஹிவளை #புலனாய்வுப்பிரிவுஅதிகாரி #பூஜித்ஜயசுந்தர #சாட்சியம் #உயிா்த்தஞாயிறு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More