Home பிரதான செய்திகள்சென்னையை வீழ்த்தி டெல்லி 2வது வெற்றியை பெற்றுள்ளது

சென்னையை வீழ்த்தி டெல்லி 2வது வெற்றியை பெற்றுள்ளது

by admin

டுபாயில் இன்றையதினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னைசூப்பர் கிங்ஸ் அணியினை டெல்லி கப்பிடல்ஸ் அணி 44 ஓட்டங்களால் வென்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை அணி களத்தடுப்பினை தொிவு செய்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிாயணிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து 176 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது #சென்னைசூப்பர்கிங்ஸ் #ஐபிஎல் #டெல்லிகப்பிடல்ஸ்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More