தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகளை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தியாகதீபம் திலீபன் உயிாிழந்த உண்ணாவிரதம் இருந்து உயிாிழந்த நாளான இன்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கேட்டு, 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து நல்லூர் கந்தன் ஆலய வீதியில் 12 நாட்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உயிாிழந்த திலீபனின் 33 ஆம் ஆண்டு நிறைவுதினம் இன்றாகும்.
திலீபனின் நினைவேந்தலை நடத்துவதற்கு அம்முறை காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத் தடையும் பெறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழ் மக்களை அடக்குமுறைக்குட்படுத்துவதை அரசு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் இன்று அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் இடம்பெறுகின்றது.
இந்தப் போராட்டத்துக்கும் காவல்துறையினரால் நீதிமன்றத் தடை பெறப்பட்டிருந்ாதமை குறிப்பிடத்தக்கது. #உணவுதவிர்ப்புப்போராட்டம் #சாவகச்சேரி #தமிழ்தேசியக்கட்சி #அடக்குமுறை #திலீபன்