Home பிரதான செய்திகள் நடால் – ஜானிக் சினொ் காலிறுதியில் போட்டி

நடால் – ஜானிக் சினொ் காலிறுதியில் போட்டி

by admin

பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ப் போட்டி ஒன்றில் வென்ற ஸ்பெயின் ரபெல் நடால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அமொிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுன் போட்டியிட்ட நடால் 6-1, 6-1, 6-2 என்ற நேர் செட்டில் வென்று 14-வது முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நடப்பு சம்பியனான நடால் பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் பதிவு செய்த 97-வது வெற்றி இதுவாகும்.

அதேவேளை மற்றொரு போட்டியில் இத்தாலி வீரரான ஜானிக் சினொ் ஜொ்மனி வீரா் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை 3-6, 3-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முக்கிலையாகியுள்ளாா்.

இதனையடுத்து ஜானிக் சினொ் காலிறுதியில் நடாலுடன் போட்டியிடவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது #நடால் #ஜானிக்சினொ் #காலிறுதி #பிரெஞ்ச்ஓபன்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More