Home இலங்கைநுவரெலியா மாவட்டத்தில் 7938 மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சை எழுத அனுமதி

நுவரெலியா மாவட்டத்தில் 7938 மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சை எழுத அனுமதி

by admin

(க.கிஷாந்தன்)

கொரோனா மற்றும் கொட்டுமழையினையும் பொருட்படுத்தாது மலையகத்தில் உள்ள தரம் ஐந்து புலமை பரிசில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், கொட்டும் மழையினூடான கடும் காற்று, குளிர் ஆகியன பொருட்படுத்தாது மலையக மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர்.

இன்று (11.10.2020) காலை 9.30 மணிக்கு ஆரம்பமான தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கு காலை 8.00 மணி முதல் மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் மிகவும் உற்சாகமாக வருகை தந்திருந்தனர்.

தரம் ஐந்து புலமை பரிசில் நடைபெறும் சகல பாடசாலைகளிலும் சுகாதார அறிவுரைகளுக்கமைவாக நேற்றைய தினம் (10.10.2020) தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

எனினும் நோர்வூட் பகுதியில் சில பாடசாலைகள் தொற்று நீக்கம் செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்கள் பரீட்சைக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் தோற்றுவதற்கான சுகாதார ஏற்பாடுகளை சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், அட்டன் கல்வி வலயத்தில் 43 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3788 மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளனர். தமிழ் மொழி மூலம் 2181 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 1607 மாணவர்களும் பரீட்சை எழுத அனுமதியை பெற்றுள்ளனர்.

அத்தோடு, நுவரெலியா கல்வி வலயத்தில் 36 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 4150 மாணவர்கள் பரீட்சை எழுதவுள்ளனர். தமிழ் மொழி மூலம் 3300 மாணவர்களும், சிங்கள மொழி மூலம் 850 மாணவர்களும் பரீட்சை எழுத அனுமதியை பெற்றுள்ளனர்.  #கொரோனா #புலமைபரிசில் #மாணவர்கள் #பரீட்சை #நுவரெலியா

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More