உலகம் பிரதான செய்திகள்

பிரான்சில் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஐவா் பலி

பிரான்சில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள லொச்சிஸ் நகரில் இருந்து நேற்றிரவு 2 பயணிகளுடன் பயணித்துக் கொண்டிருந்த இலகுரக விமானம் ஒன்றும் நாடியா செக்ஹயர் நகரில் இகுந்து லொச்சிஸ் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் விமானமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனத் தொிவித்துள்ள காவல்துறையினா் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #பிரான்ஸ் #விமானங்கள் #நேருக்குநேர் #விபத்து #சுற்றுலாபயணிகள்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.