நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20வது திருத்தத்திற்கான வாக்களிப்பிற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், துமிந்தசில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் மனுவில்,
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைச்சாத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மனு ஜனாதிபதியிடம் சென்றவுடன் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கும் என கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.