இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ரிச்சர்ட் பொம்பியோ இலங்கையினை சென்றடைந்துள்ளார்.
ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு உத்தியோக பூர்வ பயணத்தினை ஆரம்பித்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டீ எஸ்பர் ஆகியோர் நேற்றையதினம் இந்தியாவினை சென்றடைந்டைந்தமை குறிப்பிடத்தக்கது.
2ஆம் இணைப்பு -ரிச்சர்ட் பொம்பியோ இலங்கை செல்கிறார்…
October 27, 2020 4:33 am
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை ஆரம்பித்தார் பொம்பியோ….
October 26, 2020 4:33 am
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ரிச்சர்ட் பொம்பியோ நாளை (27.10.20) இலங்கைக்கு செல்லவுள்ளார்.
இந்த பயணத்தின் போது, இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோருடன் பொம்பியோ அதிகாரபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
இந்த பயணத்தின் போதான கலந்துரையாடல்களில் இரு நாடுகளுக்குமிடையிலான பன்முக ஈடுபாட்டின் பல பகுதிகள் உள்ளடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு பயணிக்கும் மிக உயர்ந்த அமெரிக்கப் பிரமுகர் இராஜாங்க செயலாளர் பொம்பியோ ஆவார்.
இந்தப் பயணம் குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், அமெரிக்காவின் சகாக்களுடன் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்காகவே ஆசியாவிற்கான தனது சுற்றுப்பயணம் இடம்பெறுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள மைக்பொம்பியோ தான் விமானத்தில் ஏறும் படங்களை ருவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளதோடு, இந்தியா இலங்கை மாலைதீவு இந்தோனேசியா ஆகியநாடுகளுக்கான எனது விமானப்பயணம் ஆரம்பமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சகாக்களுடன், சுதந்திரமான வலுவான செழிப்பான நாடுகளுக்கான, சுதந்திரமானதும், வெளிப்படையானதுமான இந்தோ பசுபிக் குறித்த பகிரப்பட்ட நோக்கத்தை ஊக்குவிப்பதற்கு கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி, என மைக்பொம்பியோ தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மைக்பொம்பியோவின் இலங்கை பயணத்தில் சந்தேகம் இருப்பதாக JVP தெரிவிப்பு….
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவின் இலங்கை பயணத்தில் சந்தேகம் உள்ளது என ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் பேசவுள்ள விடயங்கள் குறித்த உண்மையை அரசாங்கம் மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இலங்கை கொரோனாவைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் மிக முக்கிய அதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டிய அவசியம் என்னவென கேள்வி எழுப்பியுள்ள அவர், அரசாங்கம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
யுத்தம் மற்றும் ஏனைய அவசரமானவிடயங்களின் போது மாத்திரம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் விஜயங்களை மேற்கொள்வது வழமை எனக் குறிப்பிட்ட பிமல் ரட்ணாயக்கா
மைக்பொம்பியோவின் இந்த விஜயத்தின் போது எம்.சி.சி உடன்படிக்கை குறித்து ஆராயப்படும் என கருதுவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அவசியமான கடினமான முடிவுகளை எடுக்கவேண்டும் எனஅமெரிக்கா தெரிவித்துள்ளது, இலங்கையில் எம்.சி.சி உடன்படிக்கை குறித்த அலுவலகத்தை அமெரிக்கா தொடர்ந்தும் வைத்திருக்கின்றது எனவும் ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.