குருநகர் மற்றும் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாள்கள் செல்வதற்கு காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் குருநகர் பகுதியில் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள குருநகர் பகுதியில் ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதை தடுப்பதற்காக அப்பகுதியினை சாராதவர்கள் வெளி நபர்கள் உட்செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர், இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் #குருநகர் #பாசையூர் #வெளியாள்கள் #தடை #கொரோனா