Home இலங்கைகொரோனா- மன்னாரில் ஒரே இடத்தில் ஜனாஸாக்களை தகனம் செய்ய முயற்சி….

கொரோனா- மன்னாரில் ஒரே இடத்தில் ஜனாஸாக்களை தகனம் செய்ய முயற்சி….

by admin

கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது பற்றி அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், இதற்கான வர்த்தமான அறிவித்தல் நாளைமறுதினம் (12.11.20) நள்ளிரவில் வெளியிடலாம் எனவும் தெரியவருகிறது.

இதேவேளை,சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழு, நாளை புதன்கிழமை 11 ஆம் திகதி கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருத்தப்பட்ட வர்த்தமானியை வெளியிட (09.11.2020) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவையில், சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யலாமென்ற வர்த்தமானியை வெளியிடப்படும் என்ற செய்தியை அறிவித்துள்ளாரென அறியமுடிகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மன்னாரில் ஒ​ரே இடத்தில் நல்லடக்கம் செய்வது குறித்தும், அதற்காக மன்னார் மாவட்டத்திலேயே ஒரு இடத்தை தெரிவு செய்வது குறித்தும் ஆராயப்பட்டதாக அறியமுடிகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More