Home பிரதான செய்திகள்ஐபில் -5வது முறையாக மும்பை அணி கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது

ஐபில் -5வது முறையாக மும்பை அணி கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது

by admin

ஐபில் தொடரில் 5-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினை மும்பை அணி கைப்பற்றியுள்ளது. டுபாயில் இன்று நடைபெற்ற நடந்த ஐ.பி.எல். 2020 தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது.


இம்முறை சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பறியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 2-வது இடம் பெற்றுள்ள டெல்லி கப்பிட்டல்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இன்றைய இறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர் டிரெண்ட் போல்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ள்ள அதேவேளை ஐபிஎல் தொடரில் 670 ஓட்டங்களைப் பெற்ற கேஎல் ராகுல் ஒரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #ஐபில் #மும்பை #சம்பியன் #IPL

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More