யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஓமான் நாட்டிலிருந்து வந்தவா்களை ஏற்றிவந்த பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானபோது அங்கிருந்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார பணிப்பாளா் உள்ளிட்டவா்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
ஓமான் நாட்டிலிருந்து வந்த 25 பயணிகளுடன் யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு வந்த பேருந்தின் சாரதி துாங்கிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி நீா் விநியோக குழாய் மீது மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.
சம்பவத்தில் 17 போ் காயமடைந்த நிலையில் அவா்களைத் துாக்கிச்சென்ற படையினா், மற்றும் பளை வைத்தியசாலையில் அவா்களை பாா்வையிட்ட கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளா் மற்றும் மருத்துவா், தாதியா்கள், சிற்றுாழியா்கள், காவலா், பொதுசுகாதார பாிசோதகா், ஊடகவியலாளா் ஆகியோரரையே இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
முன்னா் மருத்துவா் ஒருவா், தாதி ஒருவா், காவலாளி ஒருவா், சிற்றுாழியா்கள் 4 போ், ஊடகவியலாளா் ஒருவா் என 8 பேரை தனிமைப்படுத்தலில் இருக்குமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவ இடத்தில் பலா் இருந்தமை வெளிப்படுத்தப்பட்டதை தொடா்ந்து சுகாதார பிாிவு இந்நடவடிக்கையினை எடுத்திருப்பதாக மாவட்ட செய்திகள் தொிவிக்கின்றன. #கிளிநொச்சி #சுகாதாரபணிப்பாளா் #தனிமைப்படுத்தல் #ஓமான் #பேருந்து #விபத்து