படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா மற்றும் கிாிமினல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் இணைந்து சட்டமா அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (சிஐடி) இயக்குனர் ஷானி அபேசேகராவின் சிகிச்சை குறித்து எச்சரிக்கையும் கவலையும் வெளியிட்டுள்ளனர்..
முரண்பாடான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இயக்குனர் ஷானி அபேசேகர சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து கவலையை வெளியிட்டுள்ள அஹிம்சா விக்ரமதுங்க உள்ளிட்ட குழுவினர், அவருக்கு பிணை வழங்குவதற்கான ஆட்சேபனையை மறுபரிசீலனை செய்யுமாறு சட்டமா அதிபர் டப்புலா டி லிவேராவை (Attorney General Dappula de Livera) வலியுறுத்தி உள்ளனர். முன்னாள் பயங்கரவாதிகளுக்கும், போதைப் பொருள் குற்றவாளிகளுக்கும் காட்டப்படும் அதே இரக்கம், கவனிப்பு மற்றும் கருத்தில் எடுத்தல் என்பவற்றை, முன்னாள் சிஐடி இயக்குநர் ஷானி அபேசேகரவுக்கும் காட்டப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.
ஷானி அபேசேகர அண்மையில் தடுப்புக் காவலில் இருந்தபோது கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், தற்போது பொலநறுவ கல்லேவாவில் (Gallewa, Polonnaruwa) இராணுவக் காவலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்து அஹிம்சா விக்கிரமதுங்க உள்ளிட்ட குழுவினர் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
#Ahimsawickrematunge #lasanthawickrematunge #லசந்தவிக்ரமதுங்க #shaniabeysekara #ஷானிஅபேசேகர #Gallewa #Polonnaruwa