காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளனர்.
இந்தச் சம்பவம் காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றது.
தையிட்டியைச் சேர்ந்த 19 வயதுடைய இருவரே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளனர். அவர்களில் ஒருவர் குடும்பத்தலைவர் என்று காவல்துறையினா் தெரிவித்தனர்.
இருவரையும் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதுடன் காங்கேசன்துறை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் #காங்கேசன்துறை #அலையில் #காணாமற்போயுள்ளனர் #தையிட்டி