கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிாிழந்தவா்களின் உடல்களை தகனம் செய்வதற்கெதிரான மனுக்கள் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை தகனம் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது #கொரோனா #தள்ளுபடி #தகனம் #வர்த்தமானி