காலநிலை சீாின்மையால் யாழ் மாவட்டத்தில் இதுவரை 8,374 குடும்பங்களை சேர்ந்த 28,457 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளா் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தொண்டு நிறுவன ஊழியா்களுடனான காணொளி தொழில்நுட்பம் மூலமான கலந்துரையாடலின் பின்னா் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா்.
அத்துடன் யாழ்.மாவட்டத்தில் தற்போது 31 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 1,025 குடும்பங்களை சேர்ந்த 3,058 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 39 வீடுகள் முழுமையாகவும், 1,913 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் தொண்டமனாறு தடுப்பு அணையின் 8 கதவுகள் திறக்கப்பட்ட போதும் கடல் மட்டம் உயர்ந்துள்ளதால் நீர் வடிந்தோடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்று பிற்பகல் வரை மழை தொடருமாக இருந்தால் வெள்ள நிலைமை அதிகரிக்கும் எனவும் மகேசன் தெரிவித்துள்ளார். #யாழ் #குடும்பங்கள் #பாதிப்பு #காலநிலைசீாின்மை #மகேசன் #இடைத்தங்கல்முகாம்