பேலியகொட மனிங் சந்தையின் வியாபாரிகளுக்கு சொந்தமான கடைத் தொகுதிகளை உரிய முறையில் வழங்குமாறு கோரி குறித்த வியாபாரிகள் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.
நேற்று (10.12.20) காலை கொழும்பு கோட்டையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
நேற்று மாலை வரையில் அவர்களின் பிரச்சினைகளுக்கு முடிவு வழங்கப்படாத நிலையில் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பிரச்சினை தொடர்பில் இன்று அமைச்சருடன் இடம்பெறும் கலந்துரையாடலில் முடிவு காணப்படாவிடின் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களை சேர்ந்த வியாபாரிகளும் தங்களுக்கு ஆதரவு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#சாகும்வரை_உண்ணாவிரதப்_போராட்டம் #பேலியகொட #மனிங் சந்தை