Home சினிமாபிரசாத் ஸ்ரூடியோ அதிபர்கள் மீது இளையராஜா வழக்கு

பிரசாத் ஸ்ரூடியோ அதிபர்கள் மீது இளையராஜா வழக்கு

by admin

பிரசாத் ஸ்ரூடியோவை விட்டு தன்னை வெளியேற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்காக நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி அந்த ஸ்ரூடியோ அதிபர்கள் மீது இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்ரூடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த இசையமைப்பாளர் இளையராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தாா்.

இந்நிலையில், ஸ்ரூடியோவில் இருந்து வெளியேற்றியதன் மூலம் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 50 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கும்படி ஸ்ரூடியோ உரிமையாளர்களான சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஸ்ரூடியோவில் இருந்த தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்காமல் தன்னை வெளியேற்றியது நியாயமற்றது எனவும், தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்ரூடியோவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் குறித்த மனுவுக்கு எதிா்வரும் டிசம்பர் 17-ம் திகதிக்குள் பதிலளிக்குமாறு பிரசாத் ஸ்ரூடியோ உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளாா். #பிரசாத்ஸ்ரூடியோ #இளையராஜா #மனஉளைச்சல் #நஷ்டஈடு

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More