181
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக இரண்டு வர்த்தக நிலையங்கள் பருத்தித்துறை நகர பொதுச் சுகாதார பரிசோதகரால் சீல் வைத்து மூடப்பட்டன.
பருத்தித்துறை நகரில் உள்ள புடவைக் கடை ஒன்றும் அழகுசாதனப் பொருள் விற்பனை நிலையம் ஒன்றுமே இவ்வாறு இன்று திங்கட்கிழமை மூடப்பட்டன.
மேல் மாகாணத்துக்குச் சென்று திரும்பிய உரிமையாளர்கள் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவித்தல் வழங்காமல் சுகாதார நடைமுறைகளை மீறி வர்த்தக நிலையங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டதாலேயே அவை மூடப்பட்டன. #சுகாதாரநடைமுறை #பருத்தித்துறை #சீல் #தனிமைப்படுத்தல் #பொதுச்சுகாதாரபரிசோதகரால்
Spread the love