156
சிறைச்சாலை பாதுகாப்புக்கான உருவாக்கப்பட்டுள்ள விசேட அணியில் முன்னாள் இராணுவ அதிகாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
200 பேர் கொண்ட குழுவினை இவ்வாறு இணைத்துக்கொள்ளவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலில் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கு பாதுகாப்பு செயலாளரின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவர்களுக்கு, சிறைச்சாலை புலனாய்வு பிரிவுடன் இணைந்ததாக சிறைச்சாலை பாதுகாப்பு தொடர்பான விசேட பயிற்சிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love