Home இலங்கை ஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்…

ஷானி அபேசேகர வதைப்படலம் மிண்டும் ஆரம்பம்…

by admin

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஷானி அபேசேகர இன்று (19.01.21) வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அவர் வாக்குமூலம் வழங்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கும் இறுதி நபரும் இவராக இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான காரணத்தினால் இதற்கு முன்னர் ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாக முடியாமல் போயிருந்தது.

புத்தாண்டில் முதன் முறையாக ஆணைக்குழு இன்று கூடவுள்ளதுடன் இதன் காலம் இம்மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

அதனடிப்படையில் ஆணைக்குழு உறுப்பினர்கள் இறுதி அறிக்கையை தயார் செய்துவருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More