Home இலங்கைதமிழ்க் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குக

தமிழ்க் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குக

by admin

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்க் கட்சிகளின் நடைபவனி ஆர்ப்பாட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும் கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம், நாளை (03) முதல் 6ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. 

நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்டக் குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள், ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த கண்டன நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சிறுபான்மையினர் என்ற வகையில், முஸ்லிம் சமூகமும் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. எனவே, எமது சகோதர சமூகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நடைபவனிக்கு, முஸ்லிம் சமூகமும் ஒத்துழைப்பை வழங்க  வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். #தமிழ்க்கட்சிகள் #ஆர்ப்பாட்டம் #ரிஷாட்பதியுதீன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More