இலங்கை பிரதான செய்திகள்

குடிநீரின் தரத்தினை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பகுதியில் உள்ள மக்களின் பாவனைக்கு பயன்படுத்தப்படும் குடிநீரின் தரத்தினை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

இதனடிப்படையில் கடந்த திங்கட்கிழமை(1) தொடக்கம் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  எழுமாறாக தெரிவு செய்யப்பட்ட மத்தியமுகாம் 5 பகுதியில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது குறித்த பகுதியில் கிடைக்கப்பெறும் குடிநீரின் தன்மை பற்றீரியா குளோரைட் அளவு கல்சியம் உள்ளிட்ட படிவுகள் தொடர்பான அளவீடுகளை பகுப்பாய்வு செய்யப்பட்டன. இச்செயற்பாடானது யுனிசேப் நிறுவனத்துடன் புள்ளிவிபரவியல் திணைக்களம் இணைந்து மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில்  முதன்முதலாக நாவிதன்வெளி பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதுடன் இச்செயல்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ஜெய்தனன் புள்ளிவிபர உத்தியோகத்தர் தேவராஜா நாவிதன்வெளி புள்ளிவிபரவியல் உத்தியோகத்தர் மு.வரதராஜன் தொழிநுட்ப உத்தியொகத்தர் டயானா மற்றும் கிராம சேவகர் அலெக்ஸாண்டர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். #குடிநீரின்_தரம் #பகுப்பாய்வு

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.