கேலிச் சித்திரங்கள் அல்லதுகேலிப் படங்கள் என்பதுநகைச்சுவையைத் தூண்டும் வண்ணம் வரையப்படும் சித்திரங்கள் ஆகும். கேலிச்சித்திரம் நுட்பமானகலைஅம்சங்களையும் கொண்டமைந்துள்ளது. கேலிச்சித்திரமும் ஒருகலைவடிவம்தான். கேலிச்சித்திரம் என்றகலைவடிவம் 1865 ஆம் ஆண்டளவில் சமூகமறுமலர்ச்சிக் காலத்திலேயேதோற்றம் பெற்றுள்ளது. 1865ற்கு முற்பட்டகாலத்தில் அதுஒருவிதகோட்டுச்சித்திரக்கலைஎன்றுஅழைக்கப்பட்டது. இங்கிலாந்து,பிரான்ஸ்,அமெரிக்காபோன்றநாடுகளிலும் 16ம், 17ம் நூற்றாண்டுகளில் கோட்டுச்சித்திரக்கலைவளர்ச்சியடைந்துவந்தமைகுறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் 19ம் நூற்றாண்டிலேயேகோட்டுச்சித்திரவடிவம் அதன் பணி,தன்மைஎன்பவற்றைநோக்கிக் கேலிச்சித்திரம் என்னும் வடிவமைப்பைப் பெற்றுவளரத்தொடங்கியது. இன்றுகேலிச்சித்திரமும் பிரபல்யமானஒருகலைவடிவமாகவளர்ந்துவிட்டது. பத்திரிகைகள்,சஞ்சிகைகளில் மட்டுமல்ல,தொலைக்காட்சி,திரைப்படம் போன்றதுறைகளிலும் கேலிச்சித்திரம் செல்வாக்குச் செலுத்துகின்றது.
இலகுவாககருத்துக்களைப் பிரதிபலிக்கக் கூடியகேலிச்சித்திரங்கள் நட மாடஅல்லதுஅசையத் தொடங்கினால் உணர்வூட்டம் மென்மேலும் அதிகரிக்கும். இப்படியானஒருபுதுமையை’வால்ற் டிஸ்னி’ (றுயடவ னுளைநெல) அவர்கள் தொடக்கிவைத்தார். அவர் கேலிச்சித்திரங்களை நட மாடவைத்துப் படம் பிடித்துத் திரைப்படஉலகில் புதுமைபடைத்தவர். கேலிச்சித்திரத்தையும்,திரைப்படத்துறையையும் இணைத்துப் புதுமையானகலைவடிவத்தைஉலகிற்குஅளித்தவர். உயிருள்ளநடிகர்களால் செய்யமுடியாதகாரியங்களைஉயிரோட்டமுள்ளகேலிச்சித்திரப் பாத்திரம் மூலம் செய்வித்துக் காட்டியபெருமைவால்ற்டிஸ்னிஅவர்களையேசாரும். ஆரம்பத்தில் நகைச்சுவைத் துணுக்குகளாகபத்திரிகைகளிலும்,சஞ்சிகைகளிலும் இடம்பெற்றகேலிச்சித்திரக்கலை இன்றுவளர்ச்சியடைந்துபலசித்திரக்கதைகள் பிரசுரமாவதற்குவழிவகுத்துள்ளது. எனவே,கேலிச்சித்திரங்கள் இன்றுபலவடிவங்களாகவளர்ச்சிபெற்றுபல்வேறுஊடகங்களில்,பல்வேறுதுறைகளிலும் இடம் பிடித்துள்ளது. குறித்தஒருகருத்தைமக்கள் மத்தியில் தெளிவாகஊட்டுவதற்கானஒருசிறந்தஊடகமாகக் காணப்படும் கேலிச்சித்திரங்கள் புதுப்பொலிவுபெற்றுவரும் கலைவடிவமாகவும் உள்ளது.
கேலிச் சித்திரத்தைவரைவதன் மூலம் நகைச்சுவையாகக் காட்டலாம். ஒருவரைவரையும் போதுஅவரின் உடலைமெல்லியதாகவோஅல்லதுபெரியதாகவோஅத்துடன் தலையைப் பெரிதாகவும் அல்லதுஉடலைச் சுருக்கியும்,பெரிதாகவும் வரைந்துஅதன் மூலம் மக்களின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் அமைந்திருக்கும்.
கேலிச் சித்திரத்தில் கேலிக்குள்ளானநபர்களின் உருவங்கள் கேலியாகவேவரையப்படுகின்றன.குறிப்பாககேலிசெய்யப்படுபவர்கள் படங்களைநகைச்சுவைஉணர்வுடன் அவர்களின் உருவம் அனைவரும் அறியும் வழியில் வரையப்படுகின்றது. இந்தக் கேலிச் சித்திரங்கள் பிறர் மனதைப் புண்படுத்தாதவழியில் வரையப்படுகின்றது. வரையப்படும் படங்கள் உண்மையின் அடிப்படையிலும்,மக்களுக்குசிலசெய்திகளைக் கூறும் வகையிலும்,அதேசமயம் மக்களைச் சிந்திக்கவைக்கும் வகையிலும் வரையப்படுகின்றது.
இக்கேலிச்சித்திரமானது இலகுவானகருத்துவெளிப்பாட்டுச் சித்திரம் என்பதையேபிரதிபலிக்கும். கேலிச்சித்திரங்களை இலகுவாகஎல்லோராலும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருத்தல்,கருத்துக்களைப் பிரதிபலித்தல்,பலதேவைகளுக்காகப் பயன்படுத்தப்படல்,பலஊடகங்களில் பலமுறைபயன்படல் போன்றபண்புகளைக் கொண்டிருக்கும்.
கேலிச் சித்திரகலைவடிவத்தின் சிறப்பானதனித்துவங்களாகஅதற்குமொழிபேதமோ,எழுத்தறிவுபேதமோ இல்லாமையாகும். கேலிச்;சித்திரங்களைஆக்குவதற்குத் தனித்துவமானதிறமைதேவைப்படினும்,அவற்றைப் பார்த்து இரசிப்பதற்கோ,விளங்கிக் கொள்வதற்கோமொழியறிவுதேவையில்லை. ஒருமொழியில் எழுதியவிடயமொன்றைஅந்தமொழிதெரிந்தவர்களால் மட்டுமேவாசித்துகிரகிக்கமுடியும். ஆனால் கேலிச்சித்திரங்களைஎந்தமொழிபேசுபவர்களும் விளங்கிக் கொள்ளமுடியும்.
அத்தோடுகேலிச் சித்திரங்கள் கனிவாக,மென்மையாக,மக்களுக்கேபுரியாதவகையில் நடைபெறும் அவலங்களைப் புலப்படுத்தவும்,சிரிக்கும் வகையில் எளிதில் வெளிப்படுத்தவும்மிகவும் பயன்படுத்தப்படுகின்றன.
பலசொற்களில் தலையங்கம் எழுதிஉணர்த்தமுடியாதகருத்துக்களைக் கூட கேலிச்சித்திரங்கள் எளிதாகஉணர்த்துகின்றன. சமுதாயம்,சமயம்,அரசியல்,பொருளாதாரத் துறைகளில் உள்ளகுறைகளைநகைச்சுவையுடன் உணர்த்தும்படிகேலிப்படங்கள் அமைகின்றன. கேலிச் சித்திரங்கள் அதிகமாகசிலமனிதர்களை,அவர்களின் கொள்கைகளையும் அவர்களின் சிந்தனைகளையும் கேலிசெய்யும் விதமாகவும்வரையப்படுகின்றன.
ஆரம்பத்தில் கோட்டுச் சித்திரங்களினால் உருவானகேலிச்சத்திரஅமைப்புமுறை இன்றுவளர்ச்சியடைந்துசிலஎழுத்துக் குறிப்புக்களையும் கொண்டுதிகழ்கின்றது. அரசியல்,சமூக,தனிநபர் நடத்தைகள்,குணாம்சங்கள் போன்றவற்றைப் பிரதிபலித்தகேலிச்சித்திரங்கள் இன்றுவிகடத்துணுக்குகளாகவும்,கதைவடிவங்களாகவும் வளர்ந்துள்ளன. அவைமட்டுமன்றிவிளம்பரங்களுக்கும் பயன்படுமளவிற்கு இக்கேலிச் சித்திரமுறைமைவளர்ச்சியும் முன்னேற்றமும் அடைந்துள்ளது.
ரதிகலாபுவனேந்திரன்
நுண்கலைத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்
கேலிச்சித்திரம் – ரதிகலா புவனேந்திரன்.
678
Spread the love