எதிர்வரும் மார்ச் 11ம் திகதி நடைபெறவுள்ள திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி விழாவினை வெளி மாவட்டத்திலிருந்து செல்பவா்களை தவிர்த்து கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது சுகாதார முறையினை கடைப்பிடித்து மகா சிவராத்திரி விழாவினை நடத்துவது தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மகா சிவராத்திரி விழாவின் போது பாலாவி தீர்த்தக்காவடி நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் போது திணைக்கள தலைவர்கள்,திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குருக்கள், ஆலய நிர்வாக சபையினர், காவல்துறையினா், சுகாதார துறையினர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. #திருக்கேதீஸ்வரம் #சிவராத்திரி #கொரோனா #பாலாவி