171
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தாயொருவா் சுகவீனம் காரணமாக நேற்றையதினம் உயிாிழந்துள்ளாா்.
வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த 61 வயதான தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி என்னும் தாயே நேற்றையதினம் இவ்வாறு உயிாிழந்துள்ளாா்.
அவரது மகனான தருமகுலநாதன் என்பவா் கடந்த 2000 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்த நிலையில் அவரைத்தேடி, வவுனியாவில் 1,465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை போராட்டத்திலும் கலந்து கொண்டு போராடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது #காணாமல்போன #மகனை #தாயொருவா் #மரணம் #வவுனியா
Spread the love