இச்சட்ட மறுசீரமைப்பிற்கு சுதந்திர ஊடக இயக்கம் தமது கடுமையாக எதிர்ப்பை தெரவித்துகொள்கின்றது !
ஏறக்குறைய 50 ஆண்டுகள் பழமையான, மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய, சட்டத்தினால் பாதுகாப்பு கவசமும் பெற்ற காலத்தினால் காலாவதியுமான இலங்கை பத்திரிகை பேரவை சட்ட, மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பை தெரிவித்தும் அச்சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தும், சுதந்திர ஊடக இயக்கமானது வெகுசன ஊடக அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
1973 ஆண்டு 5 ஆம் இலக்க இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தின் மூலமாக அமைக்கப்பெற்ற இலங்கை பத்திரிகை பேரவை சபையை கட்டமைப்பு ரீதியாக மறுசீரமைப்பிற்கு உட்படுத்திஇலத்திரனியல், அச்சு மற்றும் புதிய ஊடகங்களை ஒருங்கிணைத்து, ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் தொடர்பாக தீர்ப்பாய நிறுவனமாக (தீர்ப்பு வழங்கும் நிறுவனமாக) மறுசீரமைப்பதற்கு எதிர்பார்பதாக தமது ஊடக விளபரத்தில் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கமானது தனது நிலைபாடான ஊடக சுதந்திரத்திற்கு தீங்கு விளைவிக்கும் சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கியதும், அரச நிறுவனம் ஒன்றிற்கு ஊடக ஒழுங்கமைப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு காணப்படும் அதிகாரம் தொடர்பில் தமது இயக்கமானது நீண்டகாலம் தொட்டே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறித்து மார்ச் 12 ஆம் திகதி செகுசன ஊடக அமைச்சிற்கு வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,
ஊடக சமூகத்தின் ஒத்துழைப்பு மற்றும் அங்கீகாரத்துடன் செயற்படும் ஊடக பன்முகத்தன்மை,ஊடக சுயாதீனம்,சுதந்திரம் மற்றும் சமூக பொறுப்பு பாதுகாக்கப்படுகின்றதும் அனைத்து ஊடகங்களும் உள்ளீர்க்கபட்ட “சுய ஒழுங்குமுறை அல்லது சுய கட்டுபாட்டு” செயன்முறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு சுதந்திர ஊடக இயக்கம் இணக்கம் தெரிவித்து கொள்ளுவதுடன், மாறாக இலங்கை பத்திரிகை பேரவை சபைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற காரணங்கள்தொடர்பிலும் தமது கடிதத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பத்திரிகை பேரவை சட்ட எதிர்ப்பிற்கு வழிவகுக்ககூடிய தீங்கு விளைவிக்கும் சட்ட ஏற்பாடுகள்
பத்திரிகை பேரவையானது ஒரு சுயாதீன நிறுவனமாக காணப்படாமை.
இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தின் 3 ஆம் பிரிவின் படி அங்கு 7 உறுப்பினர்களில் 6 உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்படுவதுடன் இந்த செயற்பாடானது ஜனாதிபதியின் முழுமையான விருப்பபடியே நடைபெறும் செயற்பாடாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆகவே பேரவையானது ஜனாதிபதியால் தேவைப்படும் நபர்களை மட்டுமே உள்ளடக்கிய ஒரு நிறுவனமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உறுப்பினர்களை அகற்றுவதற்கானபூரண அதிகாரம் ஜனாதிபதியின் கீழ் காணப்படுகின்றமையினால் பேரவையின் சுயாதீன தன்மை இழக்கப்பட்டுள்ளது.
பேரவை உறுப்பினர்களின் சம்பளம் தீர்மானிக்கபடுவது,குறிப்பிட்ட துறைசார்ந்த அமைச்சர் என்பதனால் பேரவையின் சுயாதீனத்துவம் இழக்கப்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் மூன்று வருட பதவிக்காலத்தின் பின்னரும் மீண்டும் அவர்களை பதவியில் அமர்த்துவதற்கு தகுதியானவர்கள் என்பதனாலும் அச்செயற்பாட்டை மேற்கொள்வது ஜனாதிபதியின் விருப்பின் பேரில் மாத்திரம் என்பதனாலும் அந்த உறுப்பினர்கள் ஜனாதிபதியின் தேவைக்கேற்ப செயற்படுவது தவிர்க்க முடியாத செயல்பாடாகவும் காணப்படுகின்றது.
பத்திரிகை பேரவைக்குள் ஊடக துறைசார்ந்தவர்கள் மிக குறைவாகவே பிரதிநிதித்துவம் பெறுகின்றனர்.
இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தின் 3(அ)(1) பிரிவின் படி பத்திரிகைஎழுத்தாளர்களின் பிரதிநிதித்துவம் ஒன்றும்,மற்றும் 3(ஆ)(2) பிரிவின் படி பத்திரிகை தொழிற்சங்கத்தின் பிரதிநிதித்துவம் ஒன்றுமே பத்திரிகைத்துறையின் பத்திரிகை பேரவைக்கான பிரதிநிதித்துவம் ஆக காணப்படுகின்றது. ஆகவே அதன்படி 7 உறுப்பினர்களில் குறிப்பிட்ட துறையை பிரதிநிதிப்படுத்துவது வெறும் 2 உறுப்பினர்கள் மட்டுமே ஆகும்.இது எவ்வகையிலும் நியாயமான பிரதிநிதித்துவமாக அமையாது. மேலும் 7 ஆம் சட்ட பிரிவின்படி பேரவையில் வெற்றிடம் காணப்பட்டபோதிலும் பேரவையின் செயற்பாடுகள் எவ்விதத்திலும் தாக்கம் செலுத்தாது என்பது குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இதன் காரணமாக பத்திரிகை துறையில் இரு உறுப்பினர்கள் காணப்படாதபோதிலும் பேரவையானது செயற்படுவதற்கான சகல சட்ட ஏற்பாடுகளும் பேரவை சட்டத்தில் காணப்படுகின்றமை கவனிக்கத்தகதாகும்.
■இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தின் கீழ் காணப்படும் சில தவறுகள் அல்லது சட்ட ஏற்பாடுகள் ஊடக சுதந்திரத்தை பாதிக்கும்.
சட்டத்தின் 16 ஆம் பிரிவின் குறிபிடப்பட்டுள்ள படி அமைச்சரவை கூட்டங்கள் தொடர்பில் தகவல் அமைச்சின் செயலாளரின் அனுமதியின்றி பத்திரிகைகளில் அறிக்கையிடுவது குற்றச்செயலாக கருதப்படுகின்றது. இந்த ஏற்பாடானது மிகவும் பழமையான ஏற்பாடாக காணப்படுவதுடன் இந்த ஏற்பாடானது பத்திரிகை சுதந்திரத்தை மற்றும் பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையையும் மீறும் செயற்பாடாகவே கருதகூடியதாக உள்ளது.
■மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படல்- பேரவையின்முடிவு இறுதி தீர்வாக அமைதல் சட்டத்தின் 9(5) பிரிவின்படி பத்திரிகை பேரவையின் உத்தரவு அல்லது குற்றச்சாட்டு இறுதி தீர்ப்பாக காணப்படுவதுடன் அது தொடர்பில் எவ்வித நீதிமன்றங்களிலும்விசாரிக்க முடியாது என்பதுகுறித்த ஏற்பாட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பேரவையின் அவ்வாறானதொரு தீர்மானத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்காக எந்தவொரு தீர்பாயத்தினாலேயோ அல்லது நீதிமன்றத்தினாலேயோஇயலாது என்பது கவனிக்கத்தக்கது. இந்த ஏற்பாடானது 2௦௦7 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டத்தில் 4(2) பிரிவிற்கு முரணாகும் என்பதும் குறிபிடத்தக்கது.குறிப்பாக பேரவையின் உத்தரவை மீறும் செயற்பாடானது பேரவையை அவமரியாதைக்கு உட்படுத்தல் என்று கருதப்படுவதுடன் , அந்த சட்ட ஏற்பாடான 12(1) பிரிவு எவ்விதத்திலும் ஏற்றுக்கோள்ள முடியாத சட்ட ஆதிபத்தியமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
■பேரவையை அவமரியாதை செய்தல் தொடர்பான ஏற்பாடு
பேரவையை அவமதித்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதுடன் அத்தகைய வழக்கு தொடர்பில் பத்திரிகை பேரவை தலைவர் சமர்ப்பிக்கும் வாக்குமூலத்தை எவ்விதத்திலும் நிருபிக்காமல் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆனது ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை சட்டத்தின் 12 வது பிரிவு குறிப்பிடுகின்றது. இதுபோன்ற பேரவை அவமதிப்பு வழக்கில் பேரவை உறுப்பினர்கள் அவர்களின் விருப்பமின்றி வரவழைக்கக்கூடாது என்றும் குறித்த சட்ட ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளமை கவனிக்கத்தகது. அதன்படிமேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பேரவையினால் சமர்ப்பிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடுப்பது ஊடகவியலாளர்களுக்கு மிக கடினமான விடயமாகவும் காணப்படுகின்றது. பேரவைக்கு எதிராக சிவில் அல்லது குற்றவியல் வழக்கு தொடர்வதற்கான வாய்ப்புகள் சட்ட ஏற்பாட்டின் மூலம் மறுக்கப்படுகின்றமை ஆனது இந்நிலைமையை இன்னும் படுமோசமான நிலைக்கு தள்ளும் செயற்பாடாகவே கருதப்படுகின்றது.
■செய்திபத்திரிகைக்கான ஒழுக்கவிழுமிய விதிகளை பரிந்துரைப்பதில் ஆணையகம் ஊடக துறையிடம் கருத்துக்களை விமர்சிக்காமை சட்டத்தின் 1௦(2) பிரிவின் படி ஆணைக்குழுவின் செயல்பாடாக ஒழுக்கவிழுமிய விதிகளை பரிந்துரைக்கும் அதிகாரம் ஆணைக்குழுவை சாரும். ஆனாலும் ஊடக நெறிமுறை அமைக்கும் செயற்பாட்டின் போது ஊடக துறையில் இருந்து எவ்விதமான கருத்துக்களும் பெற்றுகொள்ளாமல் செயல்படுத்துவதற்கான பூரண அதிகாரம் பேரவைக்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆகையால் இச் செயற்பாடானது ஊடக துறைக்கு வெளியில் இருந்து மேற்கொள்ளப்படும் ஊடக ஒழுங்குமுறை செயற்பாடாகவே காணப்படுகின்றமை கவனிக்கத்தக்கதாகும்.
■குறுகியகாலவழக்கு விசாரணை மூலம் சிறைத்தண்டனை அனுபவிக்ககூடிய குற்றங்கள் அறிமுகப்படுத்தபடல்.
இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தின் 15 வது பிரிவு பல குற்றங்களை தண்டனை அளிக்ககூடிய குற்றவியல் குற்றங்களாகஅறிமுகப்படுத்துவதுடன் இந்த குற்றங்களுக்கு ரூபா ஐயாயிரம் தண்டப்பணம் அல்லது இரண்டு வருடங்கள் வரை சிறைத்தண்டனை வழங்க முடியும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு ஒழுங்குமுறைச் சட்டத்தின் மூலம் ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை வழங்குவதாவது பொருத்தமான முறையாக அமையாது என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மிக மோசமான நிலைமை என்னவென்றால்சட்டப்பிரிவு 31 ன் கீழ்குறிப்பிடப்பட்டு உள்ளகுற்றங்களுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மூலம் வழக்கு விசாரணை குறுகியகால செயல்முறையிலேயே செயல்படுத்த வேண்டும் என்பது குறிபிடத்தக்கது.சுயாதீனம் அற்ற நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் புகாரின் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் மீது குறுகிய கால வழக்கு செயல்முறையானது மிக பெரிய அசாதாரணமான செயல்பாடாகவே கருதப்படுகின்றது. பத்திரிகை பேரவை தொடர்பான நடைமுறை சிக்கல்கள் குறித்து கருத்தும் தெரிவிக்கவில்லை என்று தமது கடிதத்தில் கூறியுள்ள சுதந்திர ஊடக இயக்கம்மேல்குறிப்பிட்ட தீங்கு விளைவிக்கும் சட்ட ஏற்பாடுகளுடன்கொண்ட பத்திரிகை பேரவைசட்டத்தை ரத்து செய்யுமாறு வெகுசன ஊடக அமைச்சகத்தின் செயலாளரை வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும் .
சீதா ரஞ்சனி
அமைப்பாளர்
லசந்த டி சில்வா
செயலாளர்
2021-03- 15
ஊடக அறிக்கை