Home இந்தியா இரட்டைத் திரிபு வைரஸ் இந்தியாவில் “கூட்டணி” அமைத்துள்ளன!

இரட்டைத் திரிபு வைரஸ் இந்தியாவில் “கூட்டணி” அமைத்துள்ளன!

by admin


மாறுபாடடைந்த இரண்டு வைரஸ்கள்
இந்தியாவில் “கூட்டணி” அமைத்துள்ளன.
உலகெங்கும் கொரோனா வைரஸின் மாறுபாடடைந்த திரிபுகள் தோன்றிப் பரவி வருவது தெரிந்ததே. ஆனால் முதல்
முறையாக வைரஸின் “இரட்டைத் திரிபு”
ஒன்றை (“double mutant variant”) இந்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந் திருக்கின்றனர்.


மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில்
206 தொற்று மாதிரிகளில் இரட்டைத் திரி
படைந்த வைரஸ் கிருமி கண்டறியப்பட்
டிருப்பதை அரசாங்க அதிகாரி ஒருவர்
புதன்கிழமை உறுதிப்படுத்தி உள்ளார்.


தலைநகர் புதுடில்லியிலும் ஒன்பது பேரது தொற்று மாதிரிகளில் இரட்டைத் திரிபு அறியவந்துள்ளது என்ற தகவலை
தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின்
இயக்குநர் சுஜீத் குமார சிங் செய்தியா
ளர் மாநாட்டில் அறிவித்துள்ளார்.


“இரட்டைத் திரிபு என்பது அறிவியல் ரீதியான பெயர் அல்ல. ஏற்கனவே பரவி வருகின்ற இரண்டு திரிபுகளின் குணவி யல்புகள் இந்தப் புதிய இரட்டைத் திரிபு வைரஸில் கண்டறியப்பட்டிருக்கிறது.
அவற்றின் இரட்டைக் குணவியல்பு காரணமாக அவற்றுக்கு” “இரட்டைத் திரிபு” என்று பெயரிடப்பட்டிருக்கிறது.” இவ்வாறு தொற்று நோயியல் நிபுணர் கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இரட்டைத் திரிபு ஆபத்தானதா என்பதை உடனடியாக உறுதிப் படுத்திக் கூற முடி யாது எனத் தெரிவித்திருக்கும் நிபுணர் கள், அது வேகமாகப் பரவும் தன்மை கொண்டுள்ளதா, தடுப்பூசி மருந்தை எதிர்க்கும் திறன் உடையதா என்பது பற்றியெல்லாம் மேலும் ஆய்வுகள் நடக்கின்றன என்று கூறியுள்ளனர்.


இந்த இரட்டைத் திரிபு வைரஸில் இருபது வீதமான தொற்றுக்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள முக்கிய வர்த்தக மையமாகிய நாக்பூர்( Nagpur) நகரில் கண்டறியப்பட்டுள்ளன என்று அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.


டில்லி உட்பட இந்தியாவின் பல மாநிலங் களிலும் வைரஸ் தொற்று கடந்த சில நாட்களாக வேகமடைந்துள்ளது. புதன் கிழமை வெளியாகிய தரவுகளின் படி ஒரு நாள் தொற்றாளர்களது எண்ணிக் கை 47 ஆயிரத்து 262 ஆகும். 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையான மொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து அறுபதாயிரம் ஆகும்.

நாடெங்கும் ஒக்ஸ்போர்ட் அஸ்ராஸெ னகா மற்றும் உள்நாட்டுத் தயாரிப்பான பாரத் பயோரெக் (Bharat Biotech) ஆகிய தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன.

குமாரதாஸன். பாரிஸ்.
25-03-2021

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More