உலகம் பிரதான செய்திகள்

முக்கிய பாதையில் அபூர்வ விபத்து! புயலில் சிக்கிய ராட்சதக் கப்பல் பக்கவாட்டில் திரும்பித் தரைதட்டி சூயஸ் கால்வாயை முடக்கியது!!

பிரான்ஸின் துளுசில் உள்ள CNES – Airbus விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெளி யிட்ட செய்மதிப் படத்தையே கீழே காண் கின்றீர்கள்.படத்தில் தெரிகின்ற பாரிய சரக்குக் கப்பல் (mega-container ship) சூயஸ் காலவாய்க்குக் குறுக்கே-இடக்கு முடக்காக- கரைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டு கால்வாயை மூடி கடற்போக்கு வரத்தை அடைத்தபடி நிற்கின்றது.

இதனால் உலகின் படு பிஸியான ஒடுங்கிய கடல் வழி தடுக்கப்பட்டிருப்பது சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை உலுக்கி விட்டிருக்கிறது.வீதியின் நடுவே விபத்து நடந்தால் வாகனங்கள் இருபுறமும் தடைப்பட்டு நிரையாக நிற்பது போல் 120 மைல் நீளமான கால்வாயைக் கடப்பதற்காக 206 கப்பல்கள் வரை இருபக்கமும் காத்து நிற்கின்றன.

அவற்றில் 41 பாரிய கப்பல்களும் 21 மசகு எண்ணெய்த் தாங்கிகளும் அடங்கும்.சில கப்பல்கள் திசை திருப்பி விடப்பட்டு நடுக்கடலில்நக்கூரமிட்டுள்ளன. உலக கப்பல் போக்குவரத்து மார்க்கத் தின் மிக முக்கிய கேந்திரமான சூயஸ் கால்வாய் தடைப்பட்டிருப்பது பல பில்லியன் டொலர்கள் வர்த்தகத்தை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முடக்கி உள்ளது.

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் எகிறி உள்ளன. கப்பலுக்கு என்ன நடந்தது? பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட “எவர் கிவ்வின்” (Ever Given) என்ற பெயர் கொண்ட கப்பலே இவ்வாறு சிக்கி உள்ளது. நான்கு உதைபந்தாட்டத் திடல்களின் மொத்தப் பரப்பைக் கொண்ட உலகின் மிகப் பெரிய கொள் கலன் கப்பல்களில் ஒன்று அது.

ஜப்பானிய உரிமையாளர் ஒருவருக்குச் சொந்தமானது. தாய்வானின் ‘எவகிறீன் மரைன் (Evergreen Marine) நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. 20 மாடிக் கட்டடத்தின் உயரத்தை ஒத்த 400 மீற்றர்கள் (1400 அடி)நீளமும் 59 மீற்றர் அகலமும் கொண்டது.200 ஆயிரம் தொன் நிறையுடைய அக் கப்பலில் 20 ஆயிரம் பாரிய கொள்கலன் கள் ஏற்றப்பட்டுள்ளன.

சீனாவில் இருந்து நெதர்லாந்தின் றொட்டடாம்(Rotterdam) துறைமுகத்துக் குச் சென்றுகொண்டிருந்த வழியில் அது செங்கடல் ஊடாக எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் நுழைந்த சமயம் கடும் புயல் காற்றில் சிக்கியது என்று கூறப்படுகிறது.

மணல் புளுதியுடன் கூடிய புயல் காற்று அந்த ராட்சதக் கப்பலின் கட்டுப்பாட்டை மாலுமியிடம் இருந்து பறித்தெடுத்ததுவிட்டது. புயலின் வேகம் 200 ஆயிரம் தொன் எடை கொண்ட கப்பலை நிலைகுலையச் செய்து பயண வழிக்குக் கிடையாக- கால்வாய்க்குக் குறுக்கே- திருப்பி விட்டுள்ளது.

கப்பலின் முன்னும் பின்னுமான இரு புறங்களும் கால் வாயின் இரு பக்க மணல் கரைகளோடும் தரை தட்டியதால் இடக்கு முடக்காக நடுவில் இறுக்குப்பட்டு நிற்கிறது கப்பல்.கப்டன் உட்பட இருபது மாலுமிகளும் பாதுகாப்பாக வெளியேறி உள்ளனர்.

கப்பலுக்கு சேதங்களோ எண்ணெய்க் கசிவுகளோ இன்னும் ஏற்படவில்லை. கப்பலை மீட்க முடியுமா?பொறிக்குள் சிக்கியது போலக் காணப் படுகின்ற அந்தக் கப்பலை மீட்டெடுத்து மீண்டும் அதன் பயண வழிக்குத் திருப்பு கின்ற பகீரத முயற்சிகள் பெருமெடுப்பில் தொடங்கப்பட்டுள்ளன.

அதன் பாரிய எடை காரணமாக மீட்பு முயற்சி இலகுவானது அல்ல என்று நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதற்கு நாட்கள், வாரங்கள் ஆகலாம் என்று மதிப்பிடப்படுகிறது. கப்பலின் சுமையைக் குறைத்தால் மட்டுமே அதனை நகர்த்த முடியும் என்ற நிலை.

எனவே முதலில் அதிலிருந்து கொள்க லன்கள் வேறு சிறிய படகுகளுக்கு இறக் கப்பட்டு வருகின்றன. ஆனால் அது இலகுவானதல்ல. வெற்றியளிக்கும் அறிகுறி தெரியவில்லை. கப்பலின் முன், பின் பகுதிகள் கால் வாயின் கரையோர மண்ணில் பொறுத் துப்போய் நிற்பதால் பாரிய இயந்திரங் களின் உதவியோடு மண்ணை அகழ்ந்து கரைப்பகுதிகளை அகலப்படுத்தும் வேலைகளும் முழு மூச்சில் இரவு பகலாக நடைபெறுகின்றன.

சேதம் இன்றிக் கப்பலை நகர்ந்துவதற்கு கால்வாய்க் கரைகளை அகழ்ந்து ஆழமாக்குவதேஒரே வழி என்று நிபுணர்கள் கூறுகின் றனர். எகிப்தின் கோரிக்கையை அடுத்து நெதர்லாந்தைத் தளமாகக் கொண்ட Royal Boskalis என்ற நிறுவனம் தனது நிபுணர்கள், இயந்திரங்கள் சகிதம் கப்பலை மீட்கும் அணியில் இணைந்து கொண்டுள்ளது.

கடற்போக்குவரத்துமற்றும் கடற்கட்டுமானங்கள், பராமரிப்பு தொடர்பான சேவைகளை சர்வதேச ரீதியில் வழங்கிவருகின்ற பெரிய, நிபுணத் துவம் வாய்ந்த நிறுவனம் Royal Boskalis ஆகும்.எகிப்து நாட்டில் சூயஸ் கால்வாய் (Suez Canal) மாபெரும் மனித உழைப்பினால் 1869 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது.

மத்திய தரைக்கடலையும் செங் கடலையும் இணைக்கின்ற அது ஆபிரிக்காவை ஆசியா மற்றும் மத்திய கிழக்கு வட்டகைகளில் இருந்து பிரிக்கின்றது.சூயஸ் கால்வாய் இதுபோன்ற ஒருகப்பல் விபத்தால் துண்டிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.இதற்கு முன்பு போர்கள், போர் பதற்றங்கள் காரணமாக கால்வாய் மூடப்பட்டதுண்டு. உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகளில்12 சத வீதம் சூயஸ் கால்வாயில் தங்கி இருக்கிறது.

அதில் எரிபொருள் முக்கிய மானது. மனித முயற்சியால் நூற்றாண்டு டுகளுக்கு முன்னர் வெட்டப்பட்ட அந்தக் கால்வாயூடான கடற் போக்குவரத்து தடைப்படுவது நாளொன்றுக்கு 9.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வர்த்தகப் பொருள்களை முடக்குகின்றது எனக் கப்பல் போக்கு வரத்துத் தரவுகள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்ற சர்வதேச கடல் வர்த்தக நடவடிக்கைகளை சூயஸ் கால்வாயின் இந்த முடக்கம் மேலும் தாக்கியுள்ளது என்று பொருளா தார நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். #அபூர்வ_விபத்து #புயலில் #ராட்சதக்_கப்பல் #சூயஸ்_கால்வாய் #Ever Given

——————————————————————-

குமாரதாஸன். பாரிஸ். 26-03-2021

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link