Home இலங்கைபடையினரின் வாகனம் மோதிய ஊடகவியலாளா் மரணம்

படையினரின் வாகனம் மோதிய ஊடகவியலாளா் மரணம்

by admin

படையினரின் வாகனம் மோதி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த, ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் உதவி ஆசிரியர் பொன்னாலையூர் பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் (வயது-77) நேற்று (27) உயிரிழந்துள்ளாா்.

கடந்த  20ஆம் திகதி அவா் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது  யாழ். பன்றிக்கோட்டு பிள்ளையார் ஆலயத்துக்கு  அண்மையில் படையினரின் வாகனம் மோதியதில் தலையில் காயமடைந்த அவர் யாழ். போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது #படையினரின்_வாகனம் #மோதி #பொன்னம்பலவாணர் #ஊடகவியலாளா்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More