சினிமா பிரதான செய்திகள்

ஆஷா போஸ்லேக்கு மராட்டிய பூஷண் விருது

புகழ்பெற்ற பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே மராட்டியத்தின் உயரிய விருதான மராட்டிய பூஷண் விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான குழு 2020-ம் ஆண்டுக்கான இந்த விருதுக்கு ஆஷா போஸ்லேயின் பெயரை பரிந்துரை செய்துள்ளது.


1996-ம் ஆண்டு நிறுவப்பட்ட மராட்டிய பூஷண் விருது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் சாதனையாளர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் 10 லட்சம் ரூபா ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது.

1944-ம் ஆண்டு மராத்தி படத்தில் தனது முதல் பாடலை பாடிய ஆஷா போஸ்லே தொடர்ந்து பின்னணி பாடல் துறையில் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.


இவர் தனது இசை திறமைக்காக 2 முறை தேசிய விருதையும், 8 முறை பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார். மேலும் 2001-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. #ஆஷாபோஸ்லே #மராட்டியபூஷண்விருது #தேசியவிருது #பிலிம்பேர்விருது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link