187
யாழ்ப்பாணம் கன்னாதிட்டி காளி கோவில் குளத்தில் துர்நாற்றம் வீசுவதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து நேரில் சென்று பார்வையிட்டு , அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
கன்னாதிட்டி குளத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதனை அடுத்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை குள பகுதிக்கு சென்ற யாழ்.மாநகர முதல்வர் மற்றும் உறுப்பினர் வ. பார்த்தீபன் ஆகியோர் குளத்தினை பார்வையிட்டதுடன் அதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love