Home உலகம்நீண்ட நேரம் வேலையால் ஆண்டுதோறும் லட்சக் கணக்கானோா் உயிரிழப்பு

நீண்ட நேரம் வேலையால் ஆண்டுதோறும் லட்சக் கணக்கானோா் உயிரிழப்பு

by admin

மிகவும் நீண்ட நேரம் வேலை செய்வதால் ஆண்டுதோறும் லட்சக் கணக்கானவர்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தொிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு மட்டும் 7,45,000 பேர் பக்கவாதம் மற்றும் இதய நோய் காரணமாக உயிரிழப்பதற்கு நீண்ட வேலை நேரம் காரணமாக இருந்தது என இத்தகைய பாதிப்புகள் குறித்த மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.

தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம் மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியம் ஆகியவற்றில் நீண்ட வேலை நேரம் காரணமாக இடம்பெற்ற இறப்புகளின் எண்ணிக்கை உலகின் பிற பகுதிகளில் உள்ள எண்ணிக்கையை விடவும் கூடுதலாக உள்ளது எனவும் ம் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More