இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் 719 மருத்துவர்கள் உயிாிழந்துள்ளதாதக தொிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் வீரியம் சற்று குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84,332 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது 70 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைவான எண்ணிக்கை எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 4,0012 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், முதல் அலையை விட இரண்டாம் அலையில் இந்தியாவில் அதிக மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் எனவும் மொத்தமாக 719 மருத்துவர்கள் கொரோனாவின் இரண்டாம் அலையில் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக பிகாரில் 111 மருத்துவர்களும் அதற்கடுத்ததாக டெல்லியில் 109 மருத்துவர்களும், உத்தரப்பிரதேசத்தில் 79 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர் எனவும் தமிழகத்தில் 32 மருத்துவர்களும், புதுவையில் ஒரு மருத்துவரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.