166
தொண்டமானாறு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுக்காவல் நடவடிக்கையில் கஞ்சா போதைப்பொருள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 174 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் கடற்படையினரால் முற்படுத்தப்பட்டுள்ளனர். கஞ்சா போதைப்பொருளும்காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Spread the love