மட்டக்களப்பில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த சம்பவம் தொடா்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் இன்று (22) உத்தரவிட்டுள்ளாா்.
நேற்றையதினம் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலா் தினப்பட்ட விரோதம் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது