Home இலங்கைகொரோனா தொற்றால் இன்று யாழில் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் இன்று யாழில் ஒருவர் உயிரிழப்பு

by admin

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொவிட்-19 நோயினால் இன்று உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 73ஆக உயர்வடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்துக்கு உள்பட்ட குருநகரில் ஜே 69  மற்றும் ஜே 71 ஆகிய கிராம அலுவலகர் பிரிவுகளை தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரினால் கொவிட்-19 நோய் பரவலை கட்டுப்படுத்தும் செயலணிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்த பகுதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளிலும் ஆயிரத்து 599 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 820 பேர் வசிக்கின்றனர். அவர்களில் ஜூன் மாதத்தில் 72 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது  

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More