Home இலங்கைகொரோனோவில் இருந்து மீள வேண்டி நாக விகாரையில் சிறப்பு வழிபாடு

கொரோனோவில் இருந்து மீள வேண்டி நாக விகாரையில் சிறப்பு வழிபாடு

by admin

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்கள் மீள வேண்டி விசேட பூஜைகள்  வழிபாடு யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது .  இலங்கையின் எட்டுத்திசையிலும் உள்ள விகாரைகளில் 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரை இரவு 7.11 மணிக்கு 108 தீபங்கள் ஏற்றி பிரித் ஓதி பிக்குகளுக்கு தானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றன.

இதனொரு அங்கமாக யாழ்ப்பாணம் நாக விரையிலும் இவ் வழிபாடுகள் இடம்பெற்றன. இது வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் உள்ள விகாரைகளில் இந்த வழிபாடு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 இந்நிகழ்வில் சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர்  சிசிர ஜயக்கொடி ,யாழ் மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ,யாழ்ப்பாண பிரதேச செயலர் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More