கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஊழியர்கள் பலருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டள்ளது. நேற்றையதினம் கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 25க்கும் மேற்பட்டோா் இன்று திடீர் உடல் நலப் பாதிப்புக்குள்ளாகி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வழமை போன்று தொழிற்சாலைக்கு சென்றிருந்த ஊழியர்கள், இவ்வாறு திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள், தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டு வருவதால் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தொிவிக்கப்படுகின்றது