இலங்கை பிரதான செய்திகள்

“நாம் சர்வதேசத்துக்குச் சென்றால் நாட்டு மக்களுக்குத் தான் பாதிப்பை எதிர்நோக்க நேரிடும்”

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தொடர்பில் நாம் சர்வதேசத்துக்குச் சென்றால் நாட்டு மக்கயே பாதிப்பை எதிர்நோக்க நேரிடும். ஆனால் ஆட்சியாளர்களுக்கு அது புரியவில்லையெனத் தெரிவித்த முன்னாள் அமைச்சரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி சுமனா பிரேமசந்திர இந்த விடுதலை தொடர்பில் விளக்கம் கோரி சட்டத்தரணிகள் சங்கத்தாலும் தனது புதல்வி ஹிருணிகாவாலும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இதுவரை பதிலில்லை எனவும், “ஆக குறைந்தது இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடித்தத்துக்காவது ஜனாதிபதி விரைவில் பதில் அனுப்புவார் என நினைக்கிறேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இல்லத்தில் நேற்று (2.07.21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர் “துமிந்தவின் விடுதலையின் பின்னர் பல சமூக அமைப்புகள் மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகள் என்பன எம்முடன் கதைத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யப் போகிறீர்கள் என வினவுகின்றனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கொஞ்சம் நாம் சிந்திக்கின்றோம். சில சம்பவங்களால் நாட்டுக்கு சர்வதேசத்தில் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நாமும் இந்த சம்பவத்துடன் சர்வதேசத்தக்குச் சென்றால் இப்போது இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஜி. எஸ்.பி.பிளஸ் சலுகை கடன் பிரிச்சினைகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படலாம்”

“அவ்வாறான பாதிப்பொன்று ஏற்படுமாயின். அதனை அனுபவிக்க போவது இலங்கை மக்களே தவிர இலங்கை ஜனாதிபதியோ அவர் சார்ந்தவர்களோ இல்லை. எனவே இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து நாம் சரியான முடிவுக்கு இதுவரை வரவில்லை”

“இதேவேளை துமிந்தவின் பொது மன்னிப்புடன் தனக்கும் தனது மகளுக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் ஏதாவது அழுத்தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாலம் அவ்வாறு ஏற்பட்டால் ஜனாதிபதியே அதற்கு பொறுப்பு கூற வேண்டும்” எனவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.