அமைச்சரான பசில் ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினராக தற்போது பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். முன்னதாக, இன்று (08) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில், நிதியமைச்சராக பசில் பதவியேற்றார்.
அதன்பின்னர் அவர் பாராளுமன்றத்துக்கு சென்று, சபாநாயாகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.