200
யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு யாழ் நகரில் முன்னெடுக்கப்பட்டது கவனம், அபாயம் ,அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ்.மாவட்ட சர்வமதப் பேரவையினரால் கொரோனா விழிப்புணர்வு பதாதைகள் யாழ் நகரப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
குறித்த விழிப்புணர்வு செயற்பாடுகளின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மதத் தலைவர்கள் கலந்துகொண்டு கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்தார்கள்
Spread the love