Home இலங்கைPTAயின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 3மாதங்களின் பின்னர் விடுதலை

PTAயின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் 3மாதங்களின் பின்னர் விடுதலை

by admin

யாழ்ப்பாணம், புதுக்குடியிருப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் இன்று விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் ஐவரிடம் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எவையும் இல்லாததால் வழக்கை தொடர முடியவில்லை என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் செய்யப்பட்டதையடுத்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்பையில் கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி 24 மணித்தியாலத்தில் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அதிகாலை வேளை அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்.புதுக்குடியிருப்பைச் சேர்ந்த மறுவாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவரும் அடங்கினார்.


இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி காவல்துறைப்பிரிவுகளில் தலா ஒருவரும் என நால்வர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாத முற்பகுதியில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே நால்வரும் கைது செய்யப்பட்டுதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் 3 மாதங்களின் பின்னர் சந்தேக நபர்கள் ஐவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர். ஐவருக்கும் எதிராக பயங்கரவாத சட்டத்தின் பிரிவின் கீழ் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேக நபர்கள் ஐவரிடம் விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் அவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் எவையும் இல்லாததால் வழக்கை தொடர முடியவில்லை என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனால் சந்தேக நபர்கள் ஐவரையும் வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More