174
வவுனியா பல்கலைக்கழகத்தின் ஆரம்பவிழா, பிற்போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அரசாங்க நிகழ்வுகள், விழாக்கள் எதனையும் நடத்த வேண்டாம் என அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளதனையடுத்தே , குறித்த நிகழ்வு பிற்போடப்பட்டிருப்பதாகவும் நிகழ்வுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் , வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி த. மங்களேஸ்வரன் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 11ஆம் திகதி, புதன்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், இந்த நிகழ்வு நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love