Home சினிமா நடிகை சித்ரா காலமானார்

நடிகை சித்ரா காலமானார்

by admin

பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா (56) மாரடைப்பால் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இயக்குநர் கே.பாலசந்தரால் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சித்ரா , ரஜினியின் ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம் உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அத்துடன் கே.எஸ்.ரவிக்குமாரின் ‘சேரன் பாண்டியன்’ படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக சித்ரா நடித்துள்ளார்.

நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பிரபலமானதால் ‘நல்லெண்ணெய் சித்ரா’ என அழைக்கப்பட்ட அவா் கடைசியாக 2020 ஜனவரி வெளியான ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தாா்.

நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற மகள் இருக்கிறார். அவர் இந்தாண்டு பிளஸ் டு முடித்துள்ளார். குழந்தையை வளப்பதற்காகவே நடிக்காமல் பல ஆண்டுகள் இருந்துள்ளார் . அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More