யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஆண் ஒருவரும் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும் கொடிகாமத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 239ஆக உயர்வடைந்துள்ளது.