நியூஸிலாந்தின் ஓக்லேண்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் அங்கிருந்தவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டவா் இலங்கையர் என அந்நாட்டுகாவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் ஆறு பேர் காயம் அடைந்துள்ளதாகவும் மேலும் தாக்குதலை மேற்கொண்ட நபர் காவல்துறையினாினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
தாக்குதலை மேற்கொண்ட இலங்கையா் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அவா் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் எனவும் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர் தொிவித்துள்ளாா்.