Home இலங்கைகொக்குவிலில் சுற்றிவளைப்பு – மோட்டார் சைக்கிள் மீட்பு!

கொக்குவிலில் சுற்றிவளைப்பு – மோட்டார் சைக்கிள் மீட்பு!

by admin

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது , வன்முறைக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் யாழ்ப்பாண காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ  தலைமையில் இன்று அதிகாலை ராணுவம் மற்றும் காவல்துறையினரால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அவ்விடங்களில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இன்று அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவத்தினர்  மற்றும் காவல்துறையினரால் கொக்குவிலின்  ஒரு பகுதியை  சுற்றிவளைத்து,  சந்தேகத்துக்கிடமான வீடுகளில்  தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இன்று அதிகாலை திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு வேளைகளில் வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக அரங்கேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More